WhatsApp பற்றிய எச்சரிக்கை Report : அவசியம் படியுங்கள்.!!




சில நாட்களுக்கு முன்னர் ஜெர்மன் தொலைக்காட்சி செய்தியில் சொல்லப்பட்ட செய்தியானது அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருந்தது. பலர் தனிப்பட்ட முறையில் தங்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நம்பிக்கையின் அடிப்படையில் நெருங்கிய நண்பர்களுக்கு ‘வாட்ஸ் அப்’ (WhatsApp) மூலம் அனுப்புகிறார்கள்.

சிலர் அந்தரங்கப் படங்களைக் கூட அனுப்புகிறார்கள். நீங்கள் வாட்ஸ் அப் மூலமாக அனுப்பும் எந்தப் படங்களையும் தாங்கள் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தலாமெனவும், அவை வாட்ஸப் நிறுவனத்துக்கே சொந்தமெனவும், அவற்றை அவர்கள் யாருக்கும் வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்குக் கொடுக்கலாமெனவும், அப்படிக் கொடுக்கப்படும் படங்களை, வாங்கிய அந்த நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தினால் அதற்கு வாட்ஸப் பொறுப்பில்லை எனவும், வாட்ஸப்பே தனது Terms of Service ல் மிகச்சிறிய எழுத்துகளில் சொல்லியிருக்கிறது.

இதைச் சமீபத்தில்தான் வாட்ஸப் இணைத்திருப்பதாகவும் தெரிகிறது. இதன் படி நீங்கள் எடுத்து வாட்ஸப் மூலம் அனுப்பிய சகல செல்ஃபிகளும் வாட்ஸப் தனது பாவனைக்காக வைத்திருக்கலாம். அவற்றில் தேவையானவற்றை அவர்கள் தெரிவு செய்யலாம். இதை வாட்ஸப்தான் செய்ய வேண்டுமென்பதில்லை.

வாட்ஸப் குறிப்பிட்ட தொகையுள்ள படங்களை, அதை வாங்கக்கூடிய ஏஜெண்டுகளுக்குக் கூடப் பெருந்தொகைப் பணத்துக்கு விற்கலாம். அந்த ஏஜெண்ட்டுகள் படங்களைத் தெரிவு செய்து மற்றவர்களுக்கு விற்கலாம். இது ஜெர்மனியில் இப்போது தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது. இனி நீங்கள் அனுப்பும் படங்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். உங்கள் நண்பர்களுக்கும் பெண்களுக்கும் இதை எடுத்துச் சொல்லுங்கள்.

இதற்கான ஆதார செய்தி…உங்கள் பார்வைக்கு ==>


Print Friendly Version of this pagePrint Get a PDF version of this webpagePDF Read More Add your Comment 0 comments


உங்க Computer இன் செயல்பாடு Slow ஆக இருக்கா? இதை Try பண்ணுங்க



நீங்கள் பயன்படுத்தும் கணினியின் செயல்பாடு சில சமயங்களில் உங்களை பொறுமையின்  எல்லைக்கு  எடுத்துச்  செல்லும்.

கணினியின் செயல்பாடுகளில் Processor மற்றும் RAM முக்கியமானவையாக திகழ்கிறது.  இவற்றின் அளவை பொறுத்து கணனியின் செயல்பாடு அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

நமது பயன்பாடுகளுக்கு ஏற்ப Processor மற்றும் RAM ஆகியவற்றின் திறனை மாற்றிக்கொள்வது, கணினியின் இயங்குதிறன் அதிகரிக்க வழிவகுக்கும்
.
நமது Processor மற்றும் RAM அதிக அளவில் இருந்தும், கணனியின் செயல்பாடு குறைவாக இருந்தால் நினைவகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பயன்பாடுகளை Defragment செய்யவேண்டியது அவசியம்.

Defragment என்பது கணனியில் பல்வேறு இடங்களில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தரவுகளையும், துண்டு துண்டாக ஆங்காங்கே இருக்கும் பல்வேறு ஃபைல்களையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக நினைவகத்தில் சேமித்து வைக்கும் ஒரு முறை.

1) கணினியில் ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்து, சர்ச் ஆப்ஷனை தெரிவு  செய்து,  அதிலே Disk Defragmenter என  டைப் செய்யலாம்.

2) Start -> All Programs ->Accessories -> System Tools -> Disk Defragmenter
என்ற வழியிலும் தேர்வு செய்யலாம்
.
பின் அங்கே தோன்றும் Disk Defragmenter பெட்டியில் உள்ள Current status என்ற பிரிவின் கீழே உள்ள கணனியின் நினைவக பிரிவுகளான சி, டி, போன்றவற்றை தெரிவு செய்து, Defragment Disk என்ற பட்டனை கிளிக் செய்து, Defragment செய்யலாம்.

இந்த முறையை அடிக்கடி செய்து வரும் போது உங்கள் கணனியின் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது நன்றாக தெரியும்.






Print Friendly Version of this pagePrint Get a PDF version of this webpagePDF Read More Add your Comment 0 comments


பேஸ்புக்கில் புகைப்படங்களை எடிட் செய்யும் வசதி





முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் நாள்தோறும் மில்லியன் கணக்கான புகைப்படங்கள் தரவேற்றப்படுகின்றன.

இவ்வாறு தரவேற்றப்படும் புகைப்படங்களை ஒன்லைனில் வைத்தே மேம்படுத்துவதற்கான வசதி ஒன்றினை பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது.
தற்போது iPhone அப்பிளிக்கேஷன் ஊடாக செயற்படுத்தக்கூடியதாக இருக்கும் இவ்வசதியின் ஊடாக புகைப்படங்களின் அளவை மாற்றுதல், தெளிவை அதிகரித்தல், நிழல்களை உருவாக்குதல், வெளிச்சத்தை சரி செய்தல் போன்றவற்றினை மேற்கொள்ள முடியும். 

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை நீக்கும் வசதியும் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Print Friendly Version of this pagePrint Get a PDF version of this webpagePDF Read More Add your Comment 0 comments


WhatsApp தரும் மற்றுமொரு புதிய வசதி



குறுந்தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ கோப்புக்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வசதியை தரும் WhatsApp ஆனது தற்போது
மற்றுமொரு புதிய வசதியினை பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
அதாவது, நண்பர்களுக்காக அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியினை அவர்கள் படித்துவிட்டார்களா? எப்போது படித்தார்கள் என்பது தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளும் வசதியே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி ஸ்மார்ட் கைப்பேசி அல்லது டேப்லட்டிலுள்ள WhatsApp அப்பிளிக்கேஷனில் நீல நிறத்திலான இரு சரி அடையாளங்கள் காணப்படுமாயின் உங்களால் அனுப்பப்ட்ட செய்தியினை உங்கள் நண்பர் படித்து விட்டார் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. அத்துடன் பார்வையிட்ட நேரத்தினையும் காட்டுகின்றது.
எனினும் குழு சட்டிங்கின்போது சரி அடையாளங்கள் மட்டும் நீல நிறமாக மாறும்.


Print Friendly Version of this pagePrint Get a PDF version of this webpagePDF Read More Add your Comment 0 comments


 

© 2014 TAMIL TECH NEWS All Rights Reserved