WhatsApp பற்றிய எச்சரிக்கை Report : அவசியம் படியுங்கள்.!!




சில நாட்களுக்கு முன்னர் ஜெர்மன் தொலைக்காட்சி செய்தியில் சொல்லப்பட்ட செய்தியானது அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருந்தது. பலர் தனிப்பட்ட முறையில் தங்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நம்பிக்கையின் அடிப்படையில் நெருங்கிய நண்பர்களுக்கு ‘வாட்ஸ் அப்’ (WhatsApp) மூலம் அனுப்புகிறார்கள்.

சிலர் அந்தரங்கப் படங்களைக் கூட அனுப்புகிறார்கள். நீங்கள் வாட்ஸ் அப் மூலமாக அனுப்பும் எந்தப் படங்களையும் தாங்கள் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தலாமெனவும், அவை வாட்ஸப் நிறுவனத்துக்கே சொந்தமெனவும், அவற்றை அவர்கள் யாருக்கும் வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்குக் கொடுக்கலாமெனவும், அப்படிக் கொடுக்கப்படும் படங்களை, வாங்கிய அந்த நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தினால் அதற்கு வாட்ஸப் பொறுப்பில்லை எனவும், வாட்ஸப்பே தனது Terms of Service ல் மிகச்சிறிய எழுத்துகளில் சொல்லியிருக்கிறது.

இதைச் சமீபத்தில்தான் வாட்ஸப் இணைத்திருப்பதாகவும் தெரிகிறது. இதன் படி நீங்கள் எடுத்து வாட்ஸப் மூலம் அனுப்பிய சகல செல்ஃபிகளும் வாட்ஸப் தனது பாவனைக்காக வைத்திருக்கலாம். அவற்றில் தேவையானவற்றை அவர்கள் தெரிவு செய்யலாம். இதை வாட்ஸப்தான் செய்ய வேண்டுமென்பதில்லை.

வாட்ஸப் குறிப்பிட்ட தொகையுள்ள படங்களை, அதை வாங்கக்கூடிய ஏஜெண்டுகளுக்குக் கூடப் பெருந்தொகைப் பணத்துக்கு விற்கலாம். அந்த ஏஜெண்ட்டுகள் படங்களைத் தெரிவு செய்து மற்றவர்களுக்கு விற்கலாம். இது ஜெர்மனியில் இப்போது தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது. இனி நீங்கள் அனுப்பும் படங்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். உங்கள் நண்பர்களுக்கும் பெண்களுக்கும் இதை எடுத்துச் சொல்லுங்கள்.

இதற்கான ஆதார செய்தி…உங்கள் பார்வைக்கு ==>


Print Friendly Version of this pagePrint Get a PDF version of this webpagePDF


Share your views...

0 Respones to "WhatsApp பற்றிய எச்சரிக்கை Report : அவசியம் படியுங்கள்.!!"

Post a Comment

 

© 2014 TAMIL TECH NEWS All Rights Reserved